மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்.
நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 119 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீரற்ற காலநிலையினால் 76 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களில் நிலவும் வெள்ளத்தினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கல, கோலை மாவட்டத்தின் தரணிகல, றுவான்வெல்ல, வரக்காபொல, புளத்கொஹ_ப்பிற்றிய, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி, கிரியல்ல, அலபாத்த, கலவான, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, நாகொட, அல்பிற்றிய, நெலுவ ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் பொருந்தும்.
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, பாலிந்தநுவர, ஹொரன, அகலவத்த, மத்துகம, வளல்லாவிற்ற ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் கலிகமூவ, கேகாலை, அறநாயக்க, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.