மஹரகம எல்லை பிரதேசத்திற்கு கலால் அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இடைநிறத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை வழங்கியுள்ளார். பிரதேச இணைப்புக்குழு கூட்டத்தின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கு மேலதிகமாக இசை நிகழ்சிகள் உட்பட களியாட்ட நிகழ்வுகளுக்காக நாளாந்தம் வழங்கப்படும் கலால் அனுமதிப் பத்திர விநியோகத்தை இடைநிறத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் நலன்புரி விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்ப்படவுள்ளது. அரசாங்கத்தின் சமூக நலன்புரி வேலைத் திட்டத்திற்காக 13 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் 2000ற்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.