மாகோ – அனுராதபுரம் ரெயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தி.
வடக்கு ரெயில் மார்க்கத்தின் மாகோவில் இருந்து அனுராதபுரம் வரையான பகுதியின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்திய கடன் உதவித் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட இந்த வீதி உத்தியோகபூர்வமாக நேற்று ரெயில்வே திணைக்களத்திடம் பொறுப்பாக்கப்பட்டது.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
வடக்கு ரெயில் மாரக்கத்தின் மாகோவில் இருந்து ஓமந்தை வரையான 128 கிலோ மீற்றர் வீதி இரண்டு கட்டங்களில் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 3 ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைப்பின் பின்னர் வடக்கு ரெயில் மார்க்கத்தில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.
இதன்படி, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஐந்து மணி நேரத்தில் பயணிக்கலாம். இதற்கு முன்னர் இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு 7 மணி நேரம் செலவானது.