மார்ச் 12 இயக்கத்தின் தேர்தல் விவாதத்தில் மேலும் இருவருக்கு வாய்ப்பு
மார்ச் 12 இயக்கம் அடுத்த மாதம் 7ஆம் திகதி நடத்தவிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதத்தில் பங்கேற்பதாக மேலும் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான பி.அரியநேந்திரன் ஆகியோர் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலீப் ஜயவீர ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.