மாலைத்தீவின் பொருளாதார நெருக்கடி வலுவடைந்துள்ளது.
மாலைத்திவு பாரியளவிலான நிதி நெருக்கடிகளை நோக்கி நகர்வதாக மாலைத்தீவின் முன்னாள் நிதி அமைச்சர் இப்ராஹிம் அமீர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி இதற்கான காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிட்ச், மோடிஸ் போன்ற சர்வதேச நிதி தரப்படுத்தல் முகவர் நிலையங்களும், மாலைத்தீவை குறைந்த கடன் வசதியுடன் கூடிய தரப்படுத்தலில் இணைக்கும் ஆபத்து காணப்படுவதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி முஹம்மது முயிஸ் தலைமையிலான அரசாங்கம் இந்த நெருக்கடியை இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்ள தவறியுள்ளது.
மாலைத்தீவு அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருள் கட்டணத்தை செலுத்து வேண்டிய நிலை உள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார்.