மியன்மாரில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அதிகமானோர் உயிரிழப்பு
மியன்மாரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 120இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அடைமழையுடன் சூறாவளி காற்று தாக்கமும் ஏற்பட்டதனால் இந்த அனர்த்த நிலை உருவானது. யாகி எனும் சூறாவளி தாக்கம் மியன்மார் வான்பரப்பில் நிலை கொண்டுள்ளது.
அந்த நாட்டின் வளிமண்டலத்தின் தாழமுக்க நிலை இந்த சீரற்ற காலநிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. நாட்டின் பெரும்பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.