மில்டன் சூறாவளி அமெரிக்காவை தாக்கும் என எச்சரிக்கை.
மில்டன் சூறாவளி புளோரிடாவை நெருங்கி வருவதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக மோசமான சூறாவளியாகக் கருதப்படும் இது, அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.
நூறு ஆண்டுகளில் புளோரிடாவைத் தாக்கும் மிக மோசமான சூறாவளி என்று இதனை கருதலாம் என ஜனாதிபதி ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மதியம் அல்லது நாளை காலை சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதியிலிருந்து கிலோமீற்றர் தொலைவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய சூறாவளி மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.