மில்ட்டன் சூறாவளியினால் அமெரிக்காவில் தடைப்படும் மின்சாரம்
மில்ட்டன் எனப்படும் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைத் தாக்கியுள்ளது.
சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து, 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றிற்கான மின் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.
இந்த சூறாவளியின் தாக்கத்தினால், பல்வேறு மரணங்களும் சம்பவித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மிக ஆபத்தான சூறாவளியாக அமெரிக்காவின் சூறாவளி மத்திய நிலையம் இதனை அடையாளப்படுத்தியிருக்கிறது.
இந்த நூற்றாண்டில் வீசிய மிகவும் மோசமான சூறாவளியாக இதனை கருதமுடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.