மீண்டும் மக்கள் யுகம் – சஜித் பிரேமதாச
நாட்டில் மீண்டும் மக்கள் யுகமொன்றைக் கட்டியெழுப்பப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாம் அதிகாரமின்றி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்திலும் மக்களுக்காக அளப்பரிய சேவையை ஆற்றியதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நேற்று தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய போது, நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.