முன்னாள் அமைச்சர்களின் 14 உத்தியோகபூர்வ வீடுகளே கையளிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே இதுவரை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமைச்சர்களுக்கு 41 உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன், உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டது.
உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில், உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.