முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இறக்கும் போது அவருக்கு 74 வயது. 1982ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை தொகுதி அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை அவர் ஆரம்பித்தார்.
1994ஆம் ஆண்டு, முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான குமார குமார வெல்கம, தொடர்ந்து 30 வருடங்கள் பாராளுமன்றத்தில் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
குமார வெல்கம, தொழில், போக்குவரத்து போன்ற அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டார்.
முயல் சின்னத்தில் நவ லங்கா நிதஹஸ் பக்ஷ என்ற கட்சியை ஸ்தாபித்த குமார வெல்கம, இறக்கும் போது அந்தக் கட்சியின் தலைவராக இருந்தார்.