முன்னாள் உள்ளுராட்சி பிரதானிகள் மன்றம் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதானிகளின் மன்றம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
தமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதானிகள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை அந்த நிறுவனங்களின் பிராதானிகள் பாராட்டினர்.
அந்த மன்றத்தின் யோசனைகள் அடங்கிய ஆவணமும் அதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுவினர் அடுத்த வாரம் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.