முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் நாளை விசேட பேச்சு.
முன்னாள் ஜனாதிபதி உட்பட பிரபுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும். தற்சமயம் பிரபுகளுக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிய வருகிறது.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு எந்தவிதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தற்சமயம் நீக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.