மூன்றாவது தடவையாகவும், 36 வருடங்களின் பின்னரும் உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் ஆர்ஜென்டினா வசம்
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடப்புச் செம்பியன் பிரான்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஆர்ஜென்டினா கிண்ணம் வென்றது. ஆர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி உதை மூலம் தோற்கடித்தது. கட்டரின் லுசொய் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 2-க்கு 2 என்ற கோல் கணக்கில் நிறைவு பெற்றது. மேலதிக நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை அடித்தன.
ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், ஏஞ்சல் டி மராரியா ஒரு கோலையும் அடித்தனர்.
பிரான்ஸ் அணிக்காக 3 கோல்களையும் கைலியன் எம்பாப்பே அடித்தார். எனினும் பெனால்டி முறையில் 4-2 என ஆர்ஜென்டினா வெற்றிப்பெற்றது.
பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியது.
ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வென்றது
அந்த போட்டியில் கலந்து கொண்ட 11 வீரர்களும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
இப்போட்டித் தொடரில் ஆர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி 7 கோல்களை அடித்து, போட்டியில் இரண்டாவது அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பிரான்ஸின் மபாப்பே எட்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றார். இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் 26வது போட்டியில் லியோனல் மெஸ்ஸி கலந்து கொண்டார்
இதன்படி, அதிக உலக கிண்ணப்; போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் மொத்தமாக 13 கோல்களை அடித்துள்ளார்.
14 உலகக் கிண்ணப்; போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே இதுவரை 12 கோல்கள் அடித்துள்ளார்.
ஒரு உலகக் கிண்ணப் போட்டியில் 6 ஆட்டங்களில் கோல் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் லியோனல் மெஸ்ஸி பெற்றார்.