யானைகள் ரயிலில் மோதுவதை தடுப்பதற்கு வேலைத்திட்டம்.
வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பல பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர், அந்த மார்க்கத்திற்கான சேவை ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.
இந்த ரயில் மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. குறித்த ரயில் சேவை நாளை காலை 5.45ற்கு கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகும்.
இதேவேளை, ரயில் பாதைகள் ஊடாக, காட்டு யானைகள் பயணிக்கும் இடங்களை கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டத்தை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இடம்பெற்றது. அதன்போது, இரவில் இயக்கப்படும் சரக்கு ரயில்களை பகலில் மாத்திரம் இயக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.