யாருக்கு வாக்களிப்பது? 60 சதவீத வாக்காளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை
இலங்கையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்காத நிலையில் இருப்பதாக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறும் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை. சில அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஏற்பட்ட ஆச்சரியத்தை போன்றதொரு ஆச்சரியத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்துவார் .
திரைக்கு பின்னால் பல விஷயங்கள் நடக்கின்றன, எனவே வெளியில் இருந்து பார்த்து முடிவுகளுக்கு வர வேண்டாம். பல தனிநபர்களும் கட்சிகளும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளனர், மேலும் தேர்தல் நெருங்கும்போது அவர்கள் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு மே தின ஊர்வலத்தை டவர் மண்டபத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.