Home » யாழ். நகர மண்டபம் குறித்து அமைச்சர் வௌியிட்ட அறிவிப்பு!

யாழ். நகர மண்டபம் குறித்து அமைச்சர் வௌியிட்ட அறிவிப்பு!

Source

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இது முழுக்க முழுக்க திறைசேரியில் இருந்து நிதியளிக்கப்பட்ட திட்டமாகும். மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 2350 மில்லியன் ரூபா ஆகும். யாழ்ப்பாண நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் 2022 நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கோவிட் -19 பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமானது.

எனினும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் யாழ். நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதற்கு தேவையான பணத்தை பெற்றுத்தர அமைச்சர் திறைசேரி அதிகாரிகளுடன் பல தடவை கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய யாழ்ப்பாண நகர மண்டபக் கட்டிடம் 1939ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மோதல்கள் காரணமாக முற்றாக அழிக்கப்பட்டது.

நல்லூர் கோவிலுக்கு சொந்தமான காணியில் யாழ்ப்பாண மாநகர சபை தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையின் பல திணைக்களங்கள் இன்றும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. அதனால் யாழ். மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நகர மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பணியாற்றிய காலப்பகுதியாகும்.

யாழ். நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு செய்வதோடு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் உரிய தகைமை குறித்து ஆராயுமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image