யுத்தத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு பிராந்தியம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் யுத்தத்தை நெருங்கிய வாரமாக கடந்த வாரம் வரலாற்றில் கருதப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏழு நாட்களில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் கடந்த வாரம் லெபனானில் தரைவழி நடவடிக்கைகளை ஆரம்பித்தது. ஈரான் அந்த வாரத்தில் இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி,
சுமார் 200 பலஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய மற்றும் பிராந்திய சக்திகள் மத்திய கிழக்கில் நிலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன், மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. பு-7 குழுவும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் இதுவரை மோதல்கள் முடிவிற்கு வரவில்லை எனவும், அது யுத்தத்தை நெருங்கி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.