ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக ஒன்றுபடுமாறுஇ உக்ரேன் அழைப்பு.
உக்ரேன் ஜனாதிபதி வொலடிமிர் ஸெலென்ஸ்கி, தனது நாட்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள சமாதான மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும், அவர் அந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் ஸெலென்ஸ்கி நேற்று உரையாற்றினார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் கூடினர். அதன்போது, உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை உக்ரேன் ஜனாதிபதி வொலடிமிர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.