ரஷ்யாவின் மேற்கு பகுதி மீது தாக்குதல் நடத்துவதை யுக்ரேன் ஏற்றுக்கொண்டது.
கடந்த செவ்வாய்க் கிழமையில் இருந்து ரஷ்யாவின் மேற்கு பகுதி மீது தனது இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை யுக்ரேன் ஜனாதிபதி வொளடிமீர் செலன்ஸ்கீ ஏற்றுக்கொண்டுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட காணொளியிலேயெ இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது முன்னணி இராணுவ தளபதிகள் இதுகுறித்து தமக்கு அறிவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் காரணமாக, ரஷ்யாவின் மேற்கு பகுதி நகரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.