ராஜபக்ஷர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; சந்திரிகா முன்வைக்கும் யோசனை
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றமைக்காக நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, ராஜபக்சவின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரே காரணம் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதற்காக உலக வங்கியின் விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உலக வங்கியின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணம் கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்த முடியும் என்பதுடன், இலங்கையின் கடனை அடைக்கவும் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான குறித்த ஏழு பேரின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.