சந்தை பெறுமதியை அடிப்படையாகக் கொண்டே வெளிநாட்டு நாணய மாற்ற வீதம் தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் விருப்பதத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவலின பின்னர் ரூபாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் பண வீக்கமும் வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். டொலரின் பெறுமதியை 100 ரூபா வரை குறைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.