இலங்கையின் கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடி வருவதாகவும், இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு உயர்ஸ்தானிகரின் தலையீட்டைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா என்று பார்ப்பதற்காக ரொஷான் ரணசிங்கவையும் இந்த நிகழ்வுக்கு அழைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“கிரிக்கட் தடையை நீக்குவதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ரொஷான் ரணசிங்கவுடன் கலந்துரையாடினேன். அரசியல் சதித்திட்டம் எதுவும் திட்டமிடவில்லை. ரொஷான் ரணசிங்க எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாக இப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்ற அமைச்சரவை அமைச்சர்களும் என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் எந்த அரசியல் சதிகளிலும் ஈடுபட வரவில்லை” என்றார்.