இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாகவும், அதனை செய்ய முடியாது என தான் தெரிவித்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாவிடின் விளையாட்டுப் அமைச்சை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் அதன் பின்னர் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும் தான் கூறியதாகவும் ரணசிங்க கூறினார்.
இலங்கை கிரிக்கெட்டை கொள்ளைக் கும்பல் வழி நடத்துவதாகவும் அதனால் இடைக்கால குழுக்களை ஒழிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், இடைக்கால குழுவிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பது கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து இந்த குழுவின் நியமனத்தை நீக்குங்கள் இல்லையேல் தனக்கு கீழ் விளையாட்டு துறையை எடுப்பேன் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் கூறினார்.
என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு உங்கள் விருப்பப்படி முடிவெடுக்குங்கள் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக கூறினார். நான் நியமித்த குழுவை ஒருபோதும் நீக்கமாட்டேன் என்று ரொஷான் கூறினார்.