லெபனானில் போர்நிறுத்தத்திற்கு மேற்குலக நாடுகள் கோரிக்கை.
லெபனானுக்கு 12 நாடுகள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளன. 21 நாட்கள் போர் நிறுத்தம் இதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகள் இந்த கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பின்னர் இது வெளியிடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில்,
பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.