லெபனான் மற்றுமொரு காசாவாக மாறும் அபாயம் ஐ. நா
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 150ற்கும் அதிகமான ஏவுகணைகள் லெபனானில் உள்ள இலக்குகள் மீது ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதற்குப் பதிலடி வழங்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இருதரப்புக்களும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
லெபனான் மற்றுமொரு காசாவாக மாறும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரஸ் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.