லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 559-ஐத் தாண்டியுள்ளது.
லெபனானின் வைத்தியசாலைகள் தற்சமயம் மருத்துவ ரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அல் அபியா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 50ற்கும் அதிகமான சிறுவர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.
இதேவேளை, லெபனான் மற்றுமொரு காசாவாக மாறும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதுபற்றி உரையாற்றினார்.
காசாவில் தற்சமயம் இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொண்டு வருவதாக கத்தாரின் ஆட்சியாளர் ஷேய்க் தமீம் அல்தானி குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.