வடக்கு ஆளுநரைச் சந்தித்த நியூசிலாந்து துணைத் தூதுவர்!
இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும், முதலீட்டு வலயங்களை ஸ்தாபித்தல் தொடர்பிலும் ஆளுநரால் தெளிவுப்படுத்தப்பட்டது.
அத்துடன் புலம்பெயர் தேசத்து உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்