Home » வன்முறையை தவிர்த்தல்- சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் இளைஞர் மாநாடு, கௌரவிப்பு

வன்முறையை தவிர்த்தல்- சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் இளைஞர் மாநாடு, கௌரவிப்பு

Source
நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்பட்டு வந்த HOPE OF YOUTH “இளைஞர்களின் நம்பிக்கை ” வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடும்  இளைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிரதேச செயலகங்களில் இருந்து நான்கு மதங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். GAFSO நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் GCERF நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பசில கியூஜஸ் எமா எபடே மற்றும் HELVETAS நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஹசந்தி கஹன்டவல மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், அரச சார்பற்ற நிறுவணங்களின் மாவட்ட இணைப்பாளர் ஆ.ஐ. இர்பான் ,பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பொலிஸ் அத்தியட்சகர்கள் , இளைஞர் மன்ற இணைப்பாளர்கள் பல்வேறு இளைஞர் யுவதிகள் என பலரும் இந் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சுமார் ஒரு வருட காலமாக அம்பாறை மாவட்டத்தில் வன்முறையை தவிர்த்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் சம்மந்தமாக செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக பயணித்த இளைஞர் யுவதிகள் தங்கள் ஆக்கங்களை அரச , அரச சார்பற்ற உத்தியோகத்தர்களுக்கு , சமூகத்திற்கு வெளிப்படுத்தியதோடு , இந் நிகழ்வில் அவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், குருந்திரைப்படம் என்பன அரங்கேற்றப்பட்டு இறுதியாக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந் நிகழ்வு மூலமாக “சமாதானமும் வன்முறையை தவிர்த்தலும்” என்ற தொணிப் பொருளில் இளைஞர்கள் ஒன்றுபட்டு எதிர்காலத்தில் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். AR
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image