வரிக் கொள்கையை தளர்த்துவது தொடர்பில் கவனம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிக் கொள்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரண்டு லட்சம் தொழில் வல்லுநர்களுக்கு வரிக் கொள்கையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் வருமானம் மற்றும் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள போதிலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், சலுகை முறையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டார்.
அவ்வாறே, வரி தீர்வை எவ்வாறு கையாள்வது, வரி வலையமைப்பை விரிவுபடுத்தல், வரியில் சிக்காதவர்கள் மற்றும் அதனை தவிர்க்கும் தரப்பினருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப எதிர்காலத்தில் செயல்படவுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, முதலில் தொழில் வல்லுநர்களை பாதிக்கும் அடக்குமுறை சூழ்நிலையை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் மூலம், 2021ஃ2022 ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய தொழில் வல்லுனர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியும் என நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.