வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை வெளியிடப்படும்
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளையதினம் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.