வருமான அதிகரிப்பு: மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியும்.
ஐக்கிய மக்கள் கூட்டணி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞானபனம், நடைமுறை கொள்கை அறிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று, வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் கடனை மறுசீரமைத்து மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியும் என திரு.சுஜீன சேனசிங்க குறிப்பிடடுள்ளார்.
இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வைத்துள்ளார். சில சமூக ஊடகங்கள் தொடர்ந்தும் அவரை அவதூறாகப் பேசினாலும், ஊடகங்கள் இறுதியாக சஜித் பிரேமதாச சொல்வதை நிறைவேற்பவர் என குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் திறமையும் அனுபவமும் வாய்ந்தவர்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடன் பழுவை நிரந்தரமாக தீர்ப்பதற்கு விசேட யோசனைகள் முன்வைக்கப்படும். இந்த கடன் பழு தொடர்பில் நிரந்தர தீர்வொன்று கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் காஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாது.
வரி அறவீட்டு வலயமைப்பு பலப்படுத்தப்படல் வேண்டும். ஆறு வீதத்தில் இருந்து 36 வீதம் வரை செயற்படுத்தக்கூடிய வரி அறவீட்டு கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தல் வேண்டும்.
அதேவேளை, அரச ஊழியர்கள் மற்றும் மத்திய தர குழுமத்திற்கு 24 வீதம் வரை வரிச் சலுகை வழங்கப்படல் வேண்டும் என்று சமகி பலவேகய கட்சி எதிர்பார்க்கிறது.
நாட்டுக்கு வரக்கூடிய முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். மொத்த தேசிய உற்பத்தி 17 முதல் 18 வீதம் வரை பேணப்படல் வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.