வாகன அசெம்பிள் தொழிற்சாலை இன்று ஆரம்பம்
தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன அசெம்பிள் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைக்க உள்ளார்.
நேற்று குளியாப்பிட்டியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தொழிற்சாலையின் திறப்பு விழா பற்றிய தகவல்களை அறிவித்தார்.
இந்தத் தொழிற்சாலையில் வொக்ஸ்-வேகன் இரகத்தைச் சேர்ந்த வாகனங்களின் பாகங்கள் பொருத்தப்பட்டு முழுமையான வாகனங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இதனை வெஸ்ரேன் ஓட்டோ-மொபைல் நிறுவனம் நிர்வகிக்கிறது. இங்கு நாளொன்றில் 25 வாகனங்களை அசெம்பிள் செய்யும் வசதிகள் உள்ளன.
கார்கள் மாத்திரமன்றி வேன், டபிள்-கெப் முதலான நான்கு வகை வாகனங்கள் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுமென அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
இந்தத் தொழிற்சாலையின் மூலம் ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புக்கள் அடங்கலாக இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.
தொழிற்சாலைக்குத்தேவையான ஆளனியைப் பயிற்றுவிப்பதற்ககு பயிற்சிக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.