வானொலி சேவை மக்களின் ரசணைக்கு விருந்தாக அமைந்தது – இ.ஒ.ப. கூ. தலைவர்
வானொலி சேவை கடந்த கால மக்களின் ரசணைக்கு விருந்தாக அமைந்ததாக இலங்கை ஒலிபரப்புகு; கூட்டத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறந்த ஒலிபரப்பாளர்கள் பிள்ளைகள் மற்றும் மக்களின் ரசணைகளை மெருகூட்டும்; வகையிலான நிகழ்ச்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் அறிவிப்பாளரும், பாடலாசிரியருமான கருணாரத்ன அபேயசேகரவின் நினைவாக தேசிய வானொலியின் சிங்கள வர்தத்க சேவை இன்று கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் நிகழ்வொன்றை நடத்தியது.
இதன்போதே கூட்டத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிந்த குமாரவும் பங்கேற்றார்.