வியட்நாம் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவி
வியட்நாமில் யாகி சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
அந்த வகையில், ஒருதொகுதி நிவாரணப் பொருட்களை ஜப்பான் அரசாங்கம் இன்றையதினம் வழங்கியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த விமான நிலையம் வியட்நாமின் முன்னணி நகரமான கனோயில் அமைந்துள்ளது. ஜெய்க்கா நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உலர்உணவுப் பொருட்கள் உட்பட ஒருதொகுதி நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளது.