விவசாயிகளுக்கான உர மானியம் வங்கி கணக்கில் வைப்பு.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியமான 25 ஆயிரம் ரூபா எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக திறைசேரி மூலம் 200 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஷாந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் எட்டு இலட்சம் ஹெக்டேர் நெல் வயல்களில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் உரத் தேவையைப் பூர்த்தி செய்யக் போதுமான உரங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு இந்த உர மானியத்தை வழங்குவதற்கு ஞசு முறையை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.