வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில்
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்திற்கான நிதியை, அடுத்த வருட வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்துவெளியிட்டார்.