வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடங்களை வழங்கும் போது எச்சரிக்கையாக செயற்படவும்
வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இணையவழி ஊடாக இடம்பெறும் குற்றச்செயல்கள் பற்றி கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய 200ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் பயன்படுத்திய 500ற்கும் அதிகமான கைத்தொலைபேசிகளும், 250ற்கு மேற்பட்ட கணனிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இவர்கள் இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்களில் ஊடுருவினார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.