வெளிநாட்டு வேலைவாய்ப்பு: தனியான ஜனாதிபதி செயலணி
வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவென ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்தத்துறை மோசடிக்காரர்களின் தளமாக மாறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத்துறையில் நிலவும் சகல நிதி மோசடிகளும் தமது அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக்கூறக் கூடிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை முகவர் நிலையங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இடம்பெறும் மோசடிகளையும் இடைநிறுத்தப் போவதாக சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.