இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்ரேலிய தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கை தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அந்தச் சம்பவம் தொடர்பாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
The post வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது appeared first on LNW Tamil.