வேட்பாளர்களின் சொத்துக்கள் விபரம் இணையதளத்தில்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழங்கியுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை உள்ளடக்கிய பிரகடனத்தின் பிரதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இதுபற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 89ஆவது உறுப்புரைக்கு அமைய, ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபரங்கள் பின்னர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.