வேட்பாளர்கள் சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அதே நேரத்தில் தங்கள் சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் சொத்துப் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்காத பல சந்தர்ப்பங்கள் இருந்தன.
தேர்தலுக்குப் பின்னரும், சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்காத உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கூறல்கள் தொடர்பான தகவல்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்யும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தேசிய வானொலிக்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் மீண்டும் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல வாக்களிக்க விண்ணப்பித்த அதிகாரிகளின் பணியிடங்கள் தற்போது ஏதோ ஒரு வகையில் மாறியிருக்கலாம். எனவே, அனைவரும் தபால் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியது அவசியம்.
இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்காக ஆயிரத்து 100 கோடி ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.