ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலம் பற்றி அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் பெயர், இலச்;சினை, அடையாளம், பெறுமதிகள், விழுமியங்கள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கும் வகையில் களமிறங்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுவில் இதுபற்றிய தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் அரசியல் குழு அங்கத்தவர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.
தமது கட்சியின் அரசியல் பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உயர்மட்ட உறுப்பினர்கள் தீர்மானித்து முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவது நோக்கம் எனவும் திரு மிலிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.