ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பேரணி அனுராதபுரத்தில்
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளை இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ அதிக வாக்குகளைப் பெறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறினாலும் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சினை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பேரணி அனுராதபுரத்தின் கடபனஹ பகுதியில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.