ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யஹியா சின்வார் நியமனம்.
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யஹியா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பின் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தலைவராகவும் அவர் செயற்படுவார் என்று அல் ஜசீரா இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மயில் ஹனியா கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி ஈரான் தலைநகரில் வைத்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்கு இவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
61 வயதான யஹியா சின்வார், ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் கருதப்படுவதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பலஸ்தீனின் கான் யூனூஸ் பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் பிறந்த இவர், பல்வேறு தடவைகள் இஸ்ரேல் இராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
இவர், காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை பட்டதாரியாவார்.