ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
தமது இராணுவம் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள கட்டடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சொந்தமான ஆயுதங்கள் கட்டடத்தின் அடியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
லெபனானில் தலைநகருக்கு தெற்கே அமைந்துள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் 91 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.