Home » ஹ_ணுப்பிற்றிய கங்காராம மகாவிகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் இன்று.

ஹ_ணுப்பிற்றிய கங்காராம மகாவிகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் இன்று.

Source

சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள் விகாரையின் வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான நேரடி அஞ்சலி நிகழ்வினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள தேசிய சேவை மேற்கொள்ளவுள்ளது. இன்று பிற்பகல் 2.30ற்கு இது ஆரம்பமாகும்.

சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு இன்று கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் விசேட வாகன போக்குவரத்து ஏற்பாடு அமுலுக்கு வருகிறது.

இதன் பிரகாரம் பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியில் இருந்து தர்மபால மாவத்தைக்குள் வாகனங்கள் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்படும்.

பெரஹர சந்தியிலிருந்து கொம்பனித்தெரு வீதி நோக்கி வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. முத்தையா வீதியில் இருந்து கொம்பனி வீதி சந்தியின் திசையில் மாத்திரம் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் வாகனங்கள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image