ஹ_னுபிட்டிய கங்காராம விகாரையின் தலைமை மதகுரு காலமானார்.
செல்வாக்குமிக்க பௌத்த மதகுருமார்களில் ஒருவரான ஹ_னுபிட்டிய கங்காராம விகாரையின் தலைமை மதகுரு சங்கைக்குரிய கலபொட ஞானீஸ்சர தேரர் காலமானார்.
பல தசாப்தகாலமாக பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்சர தேரர், தமது 81 ஆவது வயதில் காலமானார். சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் தனியார் மருத்துவமனையில் காலமானதாக அறிவிக்கப்படுகிறது.
சமூகத்தின் நன்மதிப்பை வென்ற சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்சர தேரர் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளுடன் நெருங்கி பணியாற்றியவர். பௌத்த மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட பிரமுகர்களில் தேரருக்கு சிறப்பானதொரு இடமுண்டு.
1943ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி அவர் பிறந்தார். தமது 16ஆவது வயது தொடக்கம் கங்காராம விகாரையை பொறுப்பேற்று முன்னெடுத்துச் சென்று அதனை சர்வதேச மட்டத்திலான வணக்க ஸ்தலமாக மாற்றிய பெருமை சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்சர தேரரை சாரும். இந்த வணக்க ஸ்தலத்தை கல்வி மையமாகவும், சமூக வலுவூட்டல் நிலையமாகவும் அவர் மாற்றியிருந்தார்.
அமரர் சங்கைக்குரிய கலபொட ஞானீஸ்சர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி பிற்பகல் 4.30இற்கு கங்காராம விகாரையின் முன்னாலுள்ள திடலில் பூரண அரச அனுசரனையுடன் இடம்பெறும்