ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
The post 10 இந்திய மீனவர்கள் கைது appeared first on LNW Tamil.