மின்சாரத்தில் இயங்கும் நவீன வசதிகளுடன் கூடிய 100 சொகுசு பேருந்துகளை விரைவில் இலங்கைக்கு வழங்க சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கையிலுள்ள சீன தூதுவர் கி சென் ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்துகள் வழங்கப்படுகின்றன. இவை கண்டி, காலி மற்றும் கொழும்பு பகுதிகளில் இயக்கப்படவுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
ஒரு மின்சார பேருந்தின் விலை சுமார் அமெரிக்க டொலர் 225,000 (இலங்கை ரூபாய் சுமார் 6 கோடி 75 இலட்சம்) ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மல்வத்து – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திக்க வந்த சந்தர்ப்பத்தில் சீன தூதுவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
The post 100 சொகுசு பேருந்துகளை இலங்கைக்கு வழங்கும் சீனா appeared first on LNW Tamil.